அனுப்புனர்
xxxxxx ( பெயர்)
காந்திநகர் இரண்டாம் தெரு
மடிப்பாக்கம்,
சென்னை -600018
பெறுநர்
அஞ்சலக அதிகாரி அவர்கள்
கிளை அலுவலகம்
நங்கநல்லூர்
சென்னை - 600024
ஐயா
பொருள் முகவரி மாற்றம் தெரிவித்தல் தொடர்பாக
வணக்கம். நான் கடந்த 15 ஆண்டுகளாக மேற்காணும் முகவரியில் வசித்து வந்தேன். தற்போது என் குடும்பச் சூழல் காரணமாக நங்கநல்லூருக்கு குடி பெயர்ந்து விட்டேன்.
இந்த மாற்றம் குறித்து அடிக்கடி என்பால் கடிதம் தொடர்பு கொண்டு வரும் என் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் என் புதிய முகவரியை தெரிவித்து விட்டேன். ஆகவே பழைய முகவரிக்கு மடிப்பாக்கத்திற்கு வரும் என்னுடைய கடிதங்களை புதிய முகவரியான கீழ்காணும் முகவரிக்கு திருப்பி அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மிக்க நன்றி.
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
xxxxxx ( பெயர்)
புதிய முகவரி
xxxxxx ( பெயர்)
ஜெயா அப்பார்ட்மெண்ட்ஸ்
2வது மாடி, லட்சுமி நகர்,
நங்கநல்லூர்
சென்னை-600024